Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

மௌனி வெ.சாமிநாத சர்மா என்.எஸ்.கிருஷ்ணன் நினைவோடை
-5 %
தான் சந்தித்த ஆளுமைகள் தன்னை எந்த வகையில் பாதித்தார்கள் என்பதைப் பகிர்ந்துகொள்வதே சுந்தர ராமசாமியின் நினைவோடை நூல் வரிசையின் முதன்மை நோக்கமாமும் பயனும் ஆகும்.இந்நூலில் எழுத்தாளர் மௌனி , சிந்தனையாளர் வெ.சாமிநாத சர்மா , திரைகலைஞர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் பற்றிய ஞாபகங்களை பகிர்ந்துகொள்கிறார்...
₹95 ₹100
யயாதி
-5 %
தன்னுடைய மகிழ்ச்சி, தன்னுடைய உலகம், தன்னுடைய பெருமை, தன்னுடைய எதிர்காலம் என எப்போதும் தன்னை மையமாகக் கொண்டு மட்டுமே சிந்தித்துச் செயல்படுகிற தற்காலச் சமூக மாந்தனின் உருவகமாகத் திரண்டு நிற்கிறான் யயாதி. எல்லையற்ற அவனுடைய பேராசை அவனை ஆட்டிப் படைத்தபடியே இருக்கிறது. ஒவ்வொரு கணமும் தன் விழைவை மட்டுமே அவ..
₹162 ₹170
யாக்கை
-5 %
குருவை, ஞானத்தை, அமைதியைத் தேடுவதற்கு அடிப்படையான காரணம் என்ன? அன்றாடத் தகிப்பிலிருந்து தப்பித்து வெளியேறும் வேட்கைதான் ஒருவர் கண்டடையக்கூடிய ஞானமா? காமமும் செல்வமும் மனித அகத்தைச் செழுமைப்படுத்துவதற்குப் பதிலாகக் கொந்தளிப்பை உண்டாக்குவதை நுண்தளத்தில் கையாளும் நாவல் யாக்கை. உடல் அடையும் இன்பத்தின் ..
₹371 ₹390
யாக்கையின் நீலம்
-5 %
கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களைக்கொண்டு வாழ்க்கை அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் மேலும் செறிவாக்க முற்படும் எழுத்து முயற்சி. சொல்லின்மூலம் குறிப்பிட்ட அனுபவத்தை, வாதத்தை, தர்க்கத்தை, நியாயத்தை, உணர்ச்சியை, எண்ணக்குமுறலை, கட்டுக்குள் கொண்டுவர முடியும். அப்படிக் கொண்டுவருவது அவசியம். சொற்களு..
₹105 ₹110
யாத்திரை
-5 %
கடலோர மக்கள் வாழ்விலிருந்து பெற்ற பூர்வீக அறிவை அழித்து அதன் மேல் இறுகியதும் சுரண்டல் குணம் கொண்டதுமான பண்பாட்டைக் கட்ட மத நிறுவனங்கள் முயல்கின்றன. இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தப்பி, தனது முன்னோர் மரபைக் கண்டுவிடத் துடிக்கும் சிறுவனின் தேடல், அவனுடைய முதுமையிலும் அயராமல் தொடர்கிறது. முன்ன..
₹181 ₹190
யானைகளும் அரசர்களும்: சுற்றுச்சூழல் வரலாறு
-5 %
இந்த நூலில் ஆசிரியரின் கவனம் போர் யானைகளைப் பற்றியது. காலாட்படை, குதிரைப்படை, தேர், இவற்றுடன் யானைப்படையும் ஒன்றாக இருந்தது. ஒரு காலகட்டத்தில் இந்திய மன்னனின் படையில் குதிரைகளைவிட யானைகள் மிகுந்திருந்தன. குதிரையை இறக்குமதி செய்தாக வேண்டும். ஆனால் முதிர்ந்த யானைகளைக் காட்டிலிருந்து பிடித்துக் கொண்டு..
₹276 ₹290
யாரும் வராதபோது
-4 %
கவிஞனின் எதார்த்த உலகம் ஒருபுறம். அவனுடைய மன உலகின் சஞ்சாரம் மறுபுறம். இவ்விரண்டிலும் இடையறாது மாறி மாறிக் கால் பாவும் கவிஞனின் மொழியானது இவ்விரண்டுக்கிடையேயான வெளிதனில் ஒரு ஆச்சரிய நடனம்...
₹86 ₹90
யாரோ ஒருவனுக்காக
-5 %
சுந்தர ராமசாமியின் கவிதைக் காலத்தின் இரண்டாம் பருவத்தில் வெளியான நூல் இது. அங்கதமும் எள்ளலும் தனிமனித உணர்வுகளும் நிரம்பியிருந்த முதல் பருவக் கவிதைகளிலிருந்து (நடுநிசி நாய்கள்) முற்றிலும் மாறுபட்டவை ‘யாரோ ஒருவனுக்காக’ தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகள். உரைநடையின் தருக்கத்தைச் சார்ந்து கவிதையின் மென் உ..
₹57 ₹60
யார் அறிவாரோ
-5 %
கொங்கணி மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு நூல்வடிவில் வெளிவரும் முதல் படைப்பு ‘யார் அறிவாரோ’. காட்டில் தனிமையில் வாழும் வனப்பாதுகாவலாளி ஒருவன் தன்னை எரிக்கும் காமத்தை எதிர்கொள்ளும் விதமும் அதனையொட்டிய மனப் போராட்டங்களுமே கதையின் மையம். வாசிப்போரின் அகத்தே விளம்பும் எண்ணற்ற செய்திகள் கதையிலு..
₹143 ₹150
யுத்தங்களுக்கிடையில்
-5 %
யுத்தங்கள் பற்றிய பேச்சு இருந்தாலும் இது யுத்தங்களை மையமாகக்கொண்ட நாவல் அல்ல. இது அடிப்படையில் ஒரு குடும்பத்தின் கதை. விரிவானதும் சிக்கலானதுமான உறவுச் சங்கிலியால் கோர்க்கப்பட்ட ஒரு குடும்பத்தின் அறுபது ஆண்டுக் கதை. வியப்பும் வேதனையும் விரக்தியும் பரவசமும் கொண்ட வாழ்வு காலத்தினூடே பயணிக்கிறது. கால..
₹133 ₹140
ரமணிகுளம்
-5 %
90களின் தொடக்கத்தில் தமிழகமெங்கும் நிலங்களைக் கூறு போட்டு விற்றுக்கொண்டிருந்த அவலத்தையும் அதன் விளைவாக மனிதனுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் பற்றிய நாவல் இது. ரமணிகுளம் சுதந்திரப் போராட்டக் காலத்திற்கு முந்தைய மதராசபட்டினத்தின் கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதியிலிருந்த குளமாகும். சுதந்திரமடைந்ததற்குப் ..
₹266 ₹280
ரவிக்கைச்சுகந்தம்
-4 %
ஜான் சுந்தரின் பியானோ வெட்கமில்லாதது. ஆனால் அவர் சமதளப் படிகளில் இறங்கும் வித்தை தெரிந்த பியானோ கலைஞன். பேருந்தில் நம் மடியில் இருக்கும் மரக் கன்றைத் தயங்கித் தொடும் சிறுமி, ஒரு கணத்தில் அவளைத் தொடத் தளிர்க் கை நீட்டும் மரக்கன்று இரண்டும் அவர்.சடுதியில் ஐந்து மார்புகள் முளைக்கும் பெண்ணின் சித்திரம் ..
₹86 ₹90
Showing 1165 to 1176 of 1296 (108 Pages)